Bigg Boss: பெஸ்ட் பெர்ஃபார்மர் மீரா அல்ல... மது தான்...! பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்னை

Bigg Boss Tamil | இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் பெஸ்ட் பர்ஃபார்மெர் யார் என்பதில் மீராவிற்கும், மதுவிற்கும் இடையே சண்டை ஏற்படுவது போன்ற காட்சிகள் உள்ளன.

Bigg Boss: பெஸ்ட் பெர்ஃபார்மர் மீரா அல்ல... மது தான்...! பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்னை
மதுமிதா மற்றும் மீரா
  • News18
  • Last Updated: July 26, 2019, 2:40 PM IST
  • Share this:
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் மீரா மிதுன் இடையே ஏற்படும் சண்டை காட்சிகள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி தற்போது 32 நாட்களைக் கடந்துள்ளது.

இரண்டாவது வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்டார் பாத்திமா பாபு. அவரைத் தொடர்ந்து 3 மற்றும் 4-வது வார இறுதியில் நடிகை வனிதா விஜயகுமாரும், மோகன் வைத்யாவும் வெளியேற்றப்பட்டனர்.


Also read... EXCLUSIVE | குறிப்பிட்ட எந்த நடிகருடனும் நடிக்கும் எண்ணம் இல்லை - அமலா பால் பேட்டி

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக ரேஷ்மா உள்ளார். இந்நிலையில் இந்த வாரம் எலிமிமேஷன் பட்டியலில் மீரா மிதுன், சேரன், கவின், சரவணன், அபிராமி, ஷாக்சி என 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு டாஸ்க் ஒன்றை நிகழ்ச்சிக் குழு கொடுத்திருந்தது. அதில் வீட்டில் உள்ளவர்கள் இரு வேறு கிராமங்களாக பிரிந்து அந்த டாஸ்க்கை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.Also read... ரசிகர்களின் ஆதரவை பெற்றதா டியர் காம்ரேட்...? ட்விட்டர் விமர்சனம்

இந்நிலையில், இந்த டாஸ்க் நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று ஒரு புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.



அதில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் பெஸ்ட் பெர்ஃபார்மர் யார் என்பதில் மீராவிற்கும், மதுவிற்கும் இடையே சண்டை ஏற்படுவது போன்ற காட்சிகள் உள்ளன.

Also see...

First published: July 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading