போலீஸ் வன்முறையை நியாயப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் - பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு பின்னர் சினிமா சூழல் மாறுமா ?

காவல் துறையினர் வன்முறையில் ஈடுபடலாம் என்பதை வலியுறுத்தும் வண்ணம் தமிழ்சினிமாவில் எண்ணற்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன

போலீஸ் வன்முறையை நியாயப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் - பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு பின்னர் சினிமா சூழல் மாறுமா ?
தர்பார் படத்தில் ரஜினிகாந்த்
  • Share this:
'காவல்துறை உங்கள் நண்பன்' என  திரும்பும் திசையெல்லாம் போலீஸ்சாரை பொதுமக்களின் நண்பர்களாக காட்ட அந்த துறை அதிகாரிகள் போராடிக்கொண்டிருக்க, காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடலாம் என்பதையும் வன்முறைக்கு ஆளாகும் நபர் தவறு செய்திருந்தால் தன்னிச்சையாக  காவலரே தண்டிப்பது  சரிதான் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன தமிழ் சினிமாக்கள்.

கதாநாயகன் போலீஸ் அதிகாரியாக நடித்தால், பொதுமக்களுக்கு எதிரான ஊரடங்கு சட்டத்தை தாமாகவே பிறப்பித்துக் கொள்ளலாம் என்பதை ஹீரோவுக்கான பில்டப்பாகவே தமிழ் சினிமா காட்டியுள்ளது.

விசாரணைக் கைதிகளை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுமைப் படுத்திக் கொள்ளலாம் என காலம் காலமாக பாடம் எடுத்து வரும் தமிழ் சினிமா,  படத்தில் வரும் வில்லன்களை அடித்து துவைப்பது மட்டுமன்றி, அதிகாரத்தை தானே கையிலெடுத்து மரண தண்டனை விதித்து விடலாம் என்பதையும் பல திரைப்படங்கள் வலியுறுத்தியுள்ளன. தெறி திரைப்படத்தில் குற்றம் செய்தவருக்கு மரண தண்டனை விதித்து பாலத்தின் அடியில் தொங்கவிடுவது தான் படத்தின் உச்சகட்ட மாஸ் காட்சி.


இதற்கு ஒருபடி மேலே போன ரஜினிகாந்த் தர்பார் படத்தில் காவல்துறை அதிகாரியாக  ரவுடிகளை வேட்டையாடி கொண்டிருக்கும் வேளையில், விசாரிக்க வரும் மனித உரிமை ஆணைய  அதிகாரிகளையே மிரட்டி தனக்கு சாதகமாக கையெழுத்திட வைப்பது வன்முறையின் உச்சம்.

காக்க காக்க சூர்யா தொடங்கி, போக்கிரி விஜய், சாமி விக்ரம் என மாஸ் ஹீரோக்கள் அனைவருமே இறுதிக்காட்சியில் வில்லனை கொலை செய்து தடம் தெரியாது அழித்த கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் கதையாக்கி பாக்ஸ் ஆஃபீஸில் கல்லா கட்டினார்கள். இப்படியான திரைப்படங்கள்  காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்து சாமானியர்களை தண்டிக்கலாம் என  மக்கள் மனதில் மட்டுமல்ல காவலர்கள் மனதிலும் பதிய வைத்துள்ளன.

மேலும் படிக்க: மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் நடிகை வனிதாவின் திருமணம்: பீட்டர் பாலின் மனைவி காவல்நிலையத்தில் புகார்..இதன் காரணமாகவே ஒரு சில வழக்குகளில் கைது செய்யப்படுவர்கள் கைகள் உடைக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியானாலும் அதை பொதுமக்கள் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். போலீசார் நிகழ்த்தும் வன்முறைகளை கொண்டாட்டமாக காட்டி பழகிவிட்ட தமிழ் சினிமா, பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு  எதிர்வரும் காலங்களிலாவது இப்படியான காட்சிகளை தவிர்த்துக்கொள்ளும் என நம்பலாம்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading