Home /News /entertainment /

Vaathi Coming: மிஸ் இந்தியா போட்டியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய டைட்டில் வின்னர் சினி ஷெட்டி!

Vaathi Coming: மிஸ் இந்தியா போட்டியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய டைட்டில் வின்னர் சினி ஷெட்டி!

சினி ஷெட்டி நடனம்

சினி ஷெட்டி நடனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

    மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் டைட்டில் வென்ற மாடல் சினி ஷெட்டி, அந்நிகழ்வில் நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார். 

    இந்த வருடத்திற்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிப்போட்டி, மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி, "பெமினா மிஸ்-இந்தியா வேர்ல்ட் - 2022" வெற்றியாளராக முதலிடம் பிடித்தார். ராஜஸ்தானின் ரூபல் ஷெகாவத் 2-வது இடமும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான் 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்த மிஸ் இந்தியா போட்டியில் டான்ஸ் ஆஃப் இந்தியா பிரிவில் நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார் சினி ஷெட்டி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் பாடலுக்கு பிரபலங்கள், சிறியோர், பெரியோர் என அனைவரும் நடனமாடி, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். வட சென்னை கானாவுடன் வெஸ்டர்ன் இசை கலந்து அனிருத் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்.

    சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் அஜித் - வைரலாகும் வீடியோ!



    தற்போது வரை யூ-ட்யூபில் 362 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை வாத்தி கம்மிங் பாடல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay

    அடுத்த செய்தி