Prashanth Neel: ஊசிக்கு பயந்தவரா நீங்கள்? கே.ஜி.எஃப் இயக்குநரை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

பிரசாந்த் நீல்

கன்னடப் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் லாபத்தை அள்ளியது.

  • Share this:
    கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இத்தனை பயந்தவரா என நெட்டிசன்கள் அவரை கேலி செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்ததால் வந்த வினை இது.

    சமீபத்தில், பாகுபலி அளவுக்கு ஒரு படம் தேசிய அளவில் பேசப்பட்டது என்றால் அது கேஜிஎஃப் திரைப்படமே. யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்தின் முதல் பிரேமிலிருந்து கடைசி ஃபிரேம் வரை ஹீரோயிசத்தை தெறிக்கவிட்டிருந்தார். பஞ்ச் வசனத்தை வைத்து ஒரு படத்தை எடுக்க முடியுமா என்பதற்கு பதிலாக அமைந்தது கேஜிஎஃப்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    கன்னடப் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் லாபத்தை அள்ளியது. கேஜிஎஃப் இரண்டாம் பாகத்துக்கு இந்தியாவே காத்திருக்கிறது. சமீபத்தில் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. இந்த ட்ரெய்லரில், எந்திர துப்பாக்கியால் நாயகன் சரமாரியாக சுடுவதில் துப்பாக்கியின் குழல் சூடாகி ஆரஞ்சு நிறத்துக்கு வந்துவிடும். ஹீரோ அதில் சிகரெட் பற்ற வைப்பார்.

    சினிமாவில் இப்படி ஹீரோயிசத்தை உச்சத்தில் காட்டுகிறவர், நிஜத்தில், ஊசி போடுவதைக் கூட பார்க்க பயந்து முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பிரசாந்த் நீல் இணையத்தில் பகிர, அட... திரையில தான் பாகுபலி, நிஜத்துல பயந்த எலியா என்று கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

    பிரசாந்த் நீல் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து, ஜுனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்குகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: