Fathima Babu: அவசரமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை - என்னாச்சு பாத்திமா பாபுவுக்கு?

பாத்திமா பாபு

திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பாத்திமா பாபு அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

  • Share this:
    சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகை பாத்திமா பாபு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தைத் தொடங்கி அதன் பின்னர் நடிகையாக திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார் பாத்திமா பாபு. அதோடு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

    இந்நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பாத்திமா பாபு அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதைப்பற்றி விளக்கிய பாத்திமா, சிறுநீரகத்தில் 7.8 மில்லி மீட்டர் அளவில் கல் இருந்ததாகவும், அது சிறுநீர் குழாய்க்கு சென்றதால் தாங்க முடியாத வலி ஏற்படவே பாத்திமா பாபு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாகவும் தனது யூ-ட்யூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு, ”நிறைய தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். உங்கள் உடலில் கற்கள் உருவாவதிலிருந்து பாதுகாக்கும் திறன் தண்ணீருக்கு இருக்கிறது. எனவே தினமும் 3.5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் என்றார்கள். நான் தினமும் தண்ணீர் குடிக்கிறேன். நீங்களும் நிறைய தண்ணீர் குடியுங்கள்” என்றும் ரசிகர்களை அறிவுறுத்தியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: