Fast & Furious: பால் வாக்கர் சாகசம் புரிந்து அசத்திய கார் ஏலத்துக்கு வருகிறது!

பால் வாக்கர்

கதாநாயகன் வின் டீசலுக்கு நிகராக கார் சாகசங்கள் புரிந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் பால் வாக்கர். கடந்த 2013ம் ஆண்டு  நிகழ்ந்த கார் விபத்தி சிக்கி பால் வாக்கர் உயிரிழந்தார்

  • Share this:
    கார் பந்தயம் தொடர்பான படங்களில் குறிப்பிடத்தகுந்த  ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில் பயன்படுத்த கார் ஏலத்துக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படம் உலகளவில் கார் பந்தய ரசிகர்களை அதிகம் கவர்ந்த திரைப்படமாகும்.  இதன் முதல் பாகம் கடந்த 2001ம் ஆண்டு வெளியானது. அதை தொடர்ந்து தற்போது வரை 9 பாகங்கள் வெளியாகியுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் 9வது பாகம், சீனா உள்ளிட்ட ஒரு சில  நாடுகளில் மட்டுமே வெளியாகியுள்ளது.

    வின் டீசல், பால் வாக்கர்,  டுவைன் ஜான்சன்(ராக்), ஜான் சீனா,  சூங் கான், மிச்சல் ரோட்ரிகெஸ் என ஏராளமான திரைப்பிரபலங்கள்  ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்  சிரீஸில்  நடித்துள்ளனர். படத்தின் நாயகன் வின் டீசல் என்றபோதும் ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்தது  பிரைன் ஒ கானராக நடித்த ஃபால் வாக்கர்தான்.

    கதாநாயகன் வின் டீசலுக்கு நிகராக கார் சாகசங்கள் புரிந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் பால் வாக்கர். கடந்த 2013ம் ஆண்டு  நிகழ்ந்த கார் விபத்தி சிக்கி பால் வாக்கர் உயிரிழந்தார்.

    மேலும் படிக்க.. இலங்கையின் இளவரசி- சீனாவின் அறிவிப்பால் புதிய சர்ச்சை

    இந்நிலையில், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில் பால் வாக்கர் பல்வேறு சாகசங்கள் புரிந்து அசத்திய  டொயாட்டோ சுப்ரா வகை கார் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது.   படத்தில் இந்த வகை கார் மொத்தம் 8 பயன்படுத்தப்பட்டன. அதில் ஒன்று தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த கார் ஏலம் விடப்படுகிறது.  பால் வாக்கர் சாகசம் புரிந்து அசத்திய இந்த கார் அதிக விலைக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: