Home /News /entertainment /

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 10வது பாகத்தில் இணையும் அக்வாமேன்!

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 10வது பாகத்தில் இணையும் அக்வாமேன்!

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 10

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 10

ட்வைனி ஜான்சன் படத்தில் நடிப்பதில்லை என்பது உறுதியான நிலையில் அவருக்கு பதில் அக்வாமேனாக நடித்த ஜேசன் மோமோயை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் ஒன்பதாவது பாகம் வெளியாகி உலக அளவில் 760 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது.

இந்நிலையில் பத்தாவது பாகத்தை எடுக்க உள்ளனர். இந்த சீரிஸின் பிரதான நடிகரான வின் டீசல் இந்த 10வது பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு இணையாக நடித்து வந்த ட்வைனி ஜான்சன் இந்த பத்தாவது படத்தில் நடிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்த நிலையில் அக்வாமன் திரைப்படத்தில் நடித்த ஜேசன் மோமோ புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையும் படிங்க.. அம்மாவையும் என்னையும் ஏன் இப்படி பேசுறீங்க? வேதனையில் அர்ச்சனா மகள் சாரா போட்ட போஸ்ட்!

ஒன்பதாவது பாகத்தில் நடிக்கையில் வின் டீசலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ட்வைனி ஜான்சன் வின் டீசலுடன் இனி நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தார். இதனை தொடர்ந்து வின் டீசல் பத்தாவது பாகத்தில் நடிக்கும்படி ட்வைனி ஜான்சனுக்கு அழைப்பு விடுத்தார். இன்ஸ்டாகிராமிலும் ஒரு பதிவு போட்டிருந்தார். தனது குழந்தைகளும் ட்வைனி ஜான்சன் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். மறைந்த நடிகர் பால் வால்கர் குறித்தும் இந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இந்தப் பதிவிற்கு பிறகும் வின் டீசலின் வேண்டுகோளை ட்வைனி ஜான்சன் ஏற்றுக் கொள்ளவில்லை. வின் டீசல் விஷயங்களை திரிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டினார். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தில் தனக்கும் வின் டீசலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு நடுவில் அவரது குழந்தைகளையோ மறைந்த பால் வாக்கரையோ இழுக்க வேண்டிய தேவை இல்லை என்று காட்டமாக கூறினார்.

இதையும் படிங்க.. Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!

ட்வைனி ஜான்சன் படத்தில் நடிப்பதில்லை என்பது உறுதியான நிலையில் அவருக்கு பதில் அக்வாமேனாக நடித்த ஜேசன் மோமோயை ஒப்பந்தம் செய்துள்ளனர். ட்வையின் ஜான்சனின் இடத்தை ஜேசன் மோமோ நிரப்புவாரா என்பதை பத்தாவது பாகம் வந்தால் தான் தெரியும். ட்வைனி ஜான்சன் படத்தில் இல்லாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Hollywood, Kollywood

அடுத்த செய்தி