ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வேற லெவல் ரிவியூ! கன்னட சினிமாவில் சக்கைப்போடு! தமிழுக்கும் வருகிறது காந்தாரா!

வேற லெவல் ரிவியூ! கன்னட சினிமாவில் சக்கைப்போடு! தமிழுக்கும் வருகிறது காந்தாரா!

காந்தாரா படத்தின் போஸ்டர்

காந்தாரா படத்தின் போஸ்டர்

காந்தாரா படம் இந்தியில் அக்டோபர் 14-ஆம் தேதியும், தெலுங்கு டப்பிங் அக்டோபர் 15ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கன்னட மொழியில் உருவாகி, மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள காந்தரா திரைப்படம், தமிழில் டப் செய்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது.

  கடந்த 30ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், கன்னடத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யூத் குமார், பிரமோத் ஷெட்டி, ஷாலினி குரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியை காந்தாரா படம் பெற்றிருப்பதால் அதனை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், காந்தாரா படம் இந்தியில் அக்டோபர் 14-ஆம் தேதியும், தெலுங்கு டப்பிங் அக்டோபர் 15ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  சின்னத்திரையில் மீண்டும் ஜொலிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விஜே மகேஸ்வரி..

  இதேபோன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் காந்தாரா படத்தை டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு கூறியுள்ளது. காந்தாரா படத்திற்கு Book My Show  தளத்தில் 99% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த படம் குறித்து பாசிடிவான ரிவ்யூ கூறியுள்ளார்கள்.

  பிக்பாஸுக்கு மைனா போறது கன்பார்ம்.. ஆனா சின்ன ட்விஸ்ட் - நந்தினி எண்ட்ரியில் சிறு மாற்றம்!?

  காந்தாரா படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். இந்த படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறுகையில். ‘’கேஜிஎஃப் படத்துடன் ஒப்பிடும்போது காந்தாரா வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னட கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். அதை மையப்படுத்தி படத்தை உருவாக்குவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.

  காந்தாரா படத்தின் கதை அனைத்து மாநில ரசிகர்களையும், உலக சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். வெவ்வேறு மொழிகளில் காந்தாரா படத்தை டப்பிங் செய்ய முடிவு செய்திருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood