ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சென்னை வந்த துணிவு அஜித்.. ஏர்போர்ட்டில் கூடிய ரசிகர்கள் கூட்டம்!

சென்னை வந்த துணிவு அஜித்.. ஏர்போர்ட்டில் கூடிய ரசிகர்கள் கூட்டம்!

அஜித்

அஜித்

துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 11-ம் தேதியுடன் தாய்லாந்து நாட்டில் நிறைவடைந்தது. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவரைக் காண ரசிகர்கள் ஏர்போர்ட்டில் திரண்டனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கம் துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. 55 நாட்களுக்கு மேல் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர். அதன் பின்பு படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றன. அந்த சமயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.

அதன் பின் சென்னை திரும்பி அவர், மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார்.  அங்கு கடந்த 18 நாட்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 11-ம் தேதியுடன் தாய்லாந்து நாட்டில் நிறைவடைந்தது.  இந்த நிலையில் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு நேற்று அண்ணாசாலை எல்.ஐ.சி கட்டடம் அருகே நடைபெற்றது. இந்த திரைப்படம் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுவும் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டது.  இதற்காக அண்ணாசாலை செட்டை ஹைதராபாத்தில் அமைத்து படமாக்கி வந்தனர்.

Also read... யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல... பிகினியில் கலக்கும் ராஷ்மிகா மந்தனா!

அதில் எடுக்க தவறிய சில ஷாட்களை மட்டும் நேற்று எல்.ஐ.சி கட்டடம் அருகே ரியல் லொகேஷனில் படமாக்கியுள்ளனர்.  அதில் அஜித் - மஞ்சு வாரியர் பங்கு பெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த காட்சிகளில் அவர்களைப் போல உருவம் கொண்டவர்களை வைத்து டூப் போட்டு எடுத்தனர் என படக்குழு தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று அஜித் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published: