திரைப்படங்களில் வரும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ள என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறியுள்ளார் நடிகர் அருண் விஜய்.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் யானை என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
யானை படத்தை இம்மாதம் 17-ம்தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதையொட்டி படத்திற்கான புரொமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் புதிய முயற்சியை கையில் எடுத்த லோகேஷ் கனகராஜ்… தொடர் வெற்றி சாத்தியமாகுமா?
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். வில்லனாக கேஜிஎஃப் பார்ட் ஒன்னில் கருடனாக வந்த ராமச்சந்திர ராஜு நடித்துள்ளார்.
ஜெட் வேக திரைக்கதைக்கு பெயர் போனவரான ஹரி, யானை படத்தை இயக்கியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த சாமி ஸ்கொயர் திரைப்படம் கலவை விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிங்க - 30 மொழிகளில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் வெப் சீரிஸ்!!
இந்நிலையில் சேலத்தில் கே.எஸ். தியேட்டரில் யானை படத்தின் ட்ரெய்லரை கண்டுகளித்த அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அருண் விஜய் கூறுகையில், ‘திரைப்படத்தை பார்த்து நல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ ரசிகர்கள் மாறுவதற்கு திரைப்படங்கள் பொறுப்பேற்க முடியாது. இதற்கு ரசிகர்களே காரணம்.
யானை ட்ரெய்லரைப் பார்க்க...
திரைப்படங்களில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை மட்டுமே ரசிகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுக்கு பின்னர் திரைத்துறை மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
மூடர் கூடம் ட்ரெய்லரைப் பார்க்க...
யானை படத்தைப் போன்று மூடர் கூடம் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆன்டனியுடன் இணைந்து அக்னி சிறகுகள் என்ற படத்திலும் அருண் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் சர்வதேச தரத்திற்கு நிகராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.