தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது டான்ஸ், காமெடி என குழந்தைகள், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துவருகிறார். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் குடும்ப ரசிகர்களின் ஆதரவால் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தனக்கென தனி ஸ்டைல் மற்றும் மேனரிசங்களை படங்களில் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பபுள் கம்களை இரண்டு முறையில் வாயில் போடும் ஸ்டைலை பிகில் உள்ளிட்ட சில படங்களில் விஜய் செய்துவருகிறார். இந்த நிலையில் இதே ஸ்டைலை மறைந்த நடிகை சௌந்தர்யாவும் தெலுங்கு படமொன்றில் மேற்கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து தளபதி விஜய்க்கு முன்பாகவே சௌந்தர்யா செய்துவிட்டார் என கமெண்ட் செய்துவருகிறார்கள்.
இன்னொரு பக்கம் இருவருக்கும் முன்பாகவே 'ஆர்மர் ஆஃப் காட்' படத்திலேயே ஜாக்கி சான் செய்து விட்டார், ஜாக்கிசான் ஸ்டைலை தான் இருவரும் காப்பியடித்து வருகின்றனர் என ஒரு தரப்பு ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.
Jackie Chan did it 1991 - operation condor, armor of god pic.twitter.com/hfZyu0M5M8
— VEERA MALLU (@checkslungi) February 23, 2023
அந்த வகையில் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay