புதுச்சேரியில் விக்ரம் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் தீவிபத்து!
புதுச்சேரியில் விக்ரம் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் தீவிபத்து!
திரையரங்கில் தீவிபத்து
படத்தின் கடைசி காட்சியில் சூர்யா வரும்போது தீ விபத்து ஏற்பட்டதால் மின் கசிவு காரணமா, அல்லது ரசிகர்கள் கற்பூரம் ஏற்றியதால் தீ விபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் விக்ரம் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் தீவிபத்து ஏற்பட்டதால், ரசிகர்கள் அலறிஅடித்து வெளியேறினர்.
உலகநாயகன் கமலஹாசன் நடித்து வெளி வந்துள்ள படம் விக்ரம். புதுச்சேரியில் அனைத்து திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. படம் வெளியான 3ம் தேதி முதல் அனைத்து காட்சிகளும் அவை நிறைந்து காணப்படுகிறது.
கமல், விஜய் சேதுபதி, சூர்யா என நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து படத்தை பார்த்து வருகின்றனர். புதுச்சேரி நகர மற்றும் கிராமத்தில் உள்ள 15 திரையரங்கிலும் விக்ரம் படம் திரையிடப்பட்டுள்ளது. அனைத்து காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகத்துடன் படத்தை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் காலாப்பட்டு பகுதியில் ஜெயா திரையரங்கில் நேற்று விக்ரம் படம் மாலை படம் முடியும் தருவாயில் நடிகர் சூர்யா தோன்றும் நேரத்தில் திரையில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட ரசிகர் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது.
படத்தின் கடைசி காட்சியில் சூர்யா வரும்போது தீ விபத்து ஏற்பட்டதால் மின் கசிவு காரணமா, அல்லது ரசிகர்கள் கற்பூரம் ஏற்றியதால் தீ விபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.