ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'இந்த போட்டோவ டெலிட் பண்ணுங்க..' ஐஸ்வர்யா - தனுஷுன் விவாகரத்து பதிவை தேடிச்செல்லும் ரசிகர்கள்!

'இந்த போட்டோவ டெலிட் பண்ணுங்க..' ஐஸ்வர்யா - தனுஷுன் விவாகரத்து பதிவை தேடிச்செல்லும் ரசிகர்கள்!

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தங்களுடைய விவாகரத்து திட்டத்தை கைவிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக விவாகரத்து அறிவித்தபோது சோஷியல் மீடியாவில் அவர்கள் பகிர்ந்த அறிக்கையின் கீழ் இப்போது இந்த 'பதிவை நீக்கலாமே' என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தங்களுடைய விவகாரத்தை அறிக்கையாக வெளியிட்ட இந்த ஜோடி, '' '' 18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டு இருந்தனர்''

    இதையும் படிங்க: 'வாழ்க்கையின் முக்கிய பயணம்' - காதல் கசிந்துருகி திருமண அறிவிப்பை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

    முன்னதாக, நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை மட்டுமல்லாமல் ரஜினிகாந்த் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


    விவகாரத்து அறிவித்ததுமுதலே ரசிகர்கள் பலரும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். விவாகரத்து அவர்களின் தனிபட்ட விஷயம் என்றாலும், இருவரும் இணைந்தே இருக்கலாம் என ரசிகர்கள் விரும்பினர். மகன்களுக்காக இருவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்தனர். அதேசமயம் இருவரும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு தங்களின் வேலை சம்மந்தனாக சென்ற போதும் ஒன்றாகவே தங்கினர் என்று கூறப்பட்டது. இந்நிலையில்தான் தற்போது விவகாரத்து முடிவில் மாற்றம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.


    விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு உடற்பயிற்சி, சினிமா என தன்னுடைய வாழ்க்கையை வெகு பிஸியாக மாற்றிக்கொண்டார் ஐஸ்வர்யா. அதேபோல் தனுஷும் ஹாலிவுட், கோலிவுட் என திரைப்படங்களில் பிஸியானார். சொந்த வாழ்க்கையில் பிஸி என்றாலும் மகன்களுக்கு இருவருமே தங்களுடைய நேரத்தை செலவிட்டு வந்தனர். ஹாலிவுட் பட ரெட் கார்பெட்டுக்கு தன்னுடைய இரு மகன்களுடன் சென்றிருந்தார் தனுஷ். ஐஸ்வர்யா வீட்டில் பெரும்பாலான நேரத்தை மகன்களுடன் செலவிட்டு வந்தார்.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Dhanush