ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'படிப்பு இருக்கா? வேலை உண்டு..' சூர்யாவின் அடடே முன்னெடுப்பு.. குவியும் பாராட்டு!

'படிப்பு இருக்கா? வேலை உண்டு..' சூர்யாவின் அடடே முன்னெடுப்பு.. குவியும் பாராட்டு!

சூர்யா

சூர்யா

தனது ரசிகர்களின் நலனில் அக்கறை செலுத்துவதகாவும் அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேசன் மூலம் ஏராளமான மாணவர்களை படிக்கவைத்துவருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் கல்வி சார்ந்த பிரச்னைகளில் குரல் கொடுக்கவும் அவர் தவறுவதில்லை.

இந்த நிலையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளில் படித்த இளைஞர்களின் மேற்படிப்புக்கு உதவுவதாகவும் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருந்தால் அவர்கள் அரசு பணியில் இடம் கிடைக்க தேவையான பயற்சிகளுக்கு வழிவகை செய்யப்படும் என்றும் சூர்யா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஸ்ரீதேவியின் மருமகன் இவரா? மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய போனி கபூர்?

மற்ற நடிகர்கள் போல் அல்லாமல் சூர்யா ஒருவர் மட்டுமே அன்பான ஃபேன்ஸ் என சொல்வதற்கேற்ப தனது ரசிகர்களின் நலனில் அக்கறை செலுத்துவதகாவும் அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துவருகிறார்.

First published:

Tags: Actor Suriya, Fans