ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தில் என்ன ஸ்பெஷல் ? அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த வினோத்

துணிவு படத்தில் என்ன ஸ்பெஷல் ? அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த வினோத்

அஜித் குமார்

அஜித் குமார்

துணிவு படத்தில் மீண்டும் மங்காத்தா பாணியிலான அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது துணிவு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வினோத் இயக்கத்தில் துணிவு படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் வங்கிகள் கிரெடிட் கார்டு, மியூச்சுவல் ஃபண்ட், பெர்சனல் லோன் என்ற பெயரில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று இப்படம் பேசுகிறது. மேலும் தனியார் வங்கிகளில் கட்டண கொள்ளை குறித்தும் விரிவாக அலசுகிறது. வங்கிக் கொள்ளையை திட்டமிடும் அஜித் அண்ட் கோ, கொள்ளையடித்தார்களா ? அவர் ஏன் வங்கியை கொள்ளையடிக்க அஜித் முடிவு செய்கிறார் என்ற கேள்விகளுக்கு துணிவு விடை சொல்லியிருக்கிறது.

வங்கியில் கொள்ளையடிக்கும் காட்சிகள், நடிகர் அஜித்தின் ஸ்டைலிஷான மேனரிஷம் என முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. அஜித் தன்னுடைய முதல் காட்சியிலேயே ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார். அவரின் உடல்மொழி, வசனங்கள், நக்கலான சிரிப்பு, ஸ்டைலான நடனம் என அனைத்தும் அட்டகாசமாகவும், அமர்களமாகவும் அமைந்திருக்கின்றன. இதுவரை பார்க்காத வேறொரு அஜித்தை ரசிகர்களின் கண் முன் நிறுத்தியுள்ளார் எச்.வினோத்.

கடைசியாக அஜித் நடித்த விஸ்வாசம் அனைத்து தரப்பு ரசிக்கும் வகையில் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு வினோத் - அஜித் கூட்டணியின் முதல் படமான நேர்கொண்ட பார்வை ஒரு நல்ல படமாக மக்களின் மனதில் இடம்பிடித்தது. ஆனால் கமர்ஷியல் அம்சங்களை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சண்டைக் காட்சி மட்டுமே போதுமானதாக இல்லை. அடுத்து வந்த வலிமையையும் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள துணிவு படத்தில் மீண்டும் மங்காத்தா பாணியிலான அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது துணிவு.

படம் வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன்பு நடிகர்களை அவர்கள் கதாப்பாத்திரத்தின் பெயர்களுடன் படக்குழு அறிமுகப்படுத்தியது. மேலும் அஜித்தின் பெயர் என்னவாக இருக்கும் என சொல்லுங்கள் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு ரசிகர்கள் அஜித்தின் பெயர் விநாயக் மகாதேவ்வாக இருக்கும் எனவும் அஜித்தின் கதாப்பாத்திரம் மங்காத்தா படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் ரசிகர்கள் தங்கள் யூகங்களை வெளியிட்டுவந்தனர். அதற்கேற்ப படத்தின் டிரெய்லரிலும் அஜித்தின் பெயர் குறிப்பிடவில்லை.

இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்து. படம் பார்த்த ரசிகர்களுக்கு அவர்களே எதிர்பாராத ட்விஸ்ட்டை வைத்திருந்தார் இயக்குநர் வினோத். படத்தில் நடிகர் அஜித்தின் கதாப்பாத்திரத்துக்கு பெயரே இல்லை. இது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Thunivu, Varisu