உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக, குடியாத்தம் திரையரங்கில் இரவு முதலே ரசிகர்கள் குவிந்தனர்.
நடிகரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் - இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று திரையிடப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், 3 திரையரங்குகளில் நெஞ்சுக்கு நீதி படம் ரிலீசான நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சியை காண்பதற்காக உதயநிதியின் ரசிகர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஊர்வலமாக சென்றனர்.
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், வழி நெடுகிலும் மேள, தாளங்கள் முழங்க சரவெடிகளை வெடித்தவாறு, உதயநிதியின் மிகப்பெரிய கட் அவுட்டை தூக்கிச் சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து திரையங்க வாயில் முன்பு கூடிய ரசிகர்கள், சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்டவைகளை செய்து அசத்தினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பிரியா திரையரங்கில், இன்று மாலை 6.30 மணி காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளையும், திமுக எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் முன்பதிவு செய்துள்ளார்.
Also read... Gold Rate: மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (20 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?
இந்த டிக்கெட்டுகளை இளைஞர்களுக்கும், கட்சியினருக்கும் இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவித்த அவர், டிக்கெட் தேவைப்படுவோர் தொடர்புகொள்வதற்கான கைப்பேசி எண்ணையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
-செய்தியாளர்: கோபிநாத்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Udhayanidhi Stalin