முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடுக்கடலில் நடிகர் சந்தானத்திற்கு பேனர் வைத்த ரசிகர்கள்

நடுக்கடலில் நடிகர் சந்தானத்திற்கு பேனர் வைத்த ரசிகர்கள்

நடுக்கடலில் சந்தானத்திற்கு பேனர் வைத்த ரசிகர்கள்

நடுக்கடலில் சந்தானத்திற்கு பேனர் வைத்த ரசிகர்கள்

நடிகர் சந்தானம் நடித்து நாளை வெளியாக உள்ள திரைப்படம் குலு குலு. இதனை  கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

புதுச்சேரியில் நடுக்கடலில் நடிகர் சந்தானத்திற்கு பேனர் வைத்த ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கடற்கரை சாலையில்  தற்போதுள்ள காந்தி சிலைக்கு பின்புறம் ரயில் பாலம் இருந்தது. கால போக்கில் பாலம் உடைந்து வெறும் இரும்பு தூண்கள் மட்டுமே கடலில் காட்சி அளிக்கிறது. இதனை விளம்பரம் வைக்கும் இடமாக அரசியல் தொண்டர்களும் திரைப்பட நடிகர்களின் ரசிகர்களும் மாற்றி விட்டனர்.

தனுஷ், விஜய், அஜித் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு நடுக்கடலில் பேனர் வைத்து அவர்களது கெத்தை காட்டுவது வழக்கம். இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படத்தை வாழ்த்தி நடுக்கடலில் பேனர் வைத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

நடிகர் சந்தானம் நடித்து நாளை வெளியாக உள்ள திரைப்படம் குலு குலு. இதனை  கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்தனர்.

Also read... மைனஸ்-களை ப்ளஸ் ஆக்கி... பொல்லாதவனாய் பொளந்துகட்டும் அசுரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

புதுச்சேரி கடலில் காந்தி சிலை அருகயுள்ள பழைய துறைமுக தூண்களுக்கு நடுவில் படகில் சென்று பேனர் வைத்து இவர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Santhanam