முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கே ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்' - ஆர்.ஜே.பாலாஜி

'முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கே ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்' - ஆர்.ஜே.பாலாஜி

ரன் பேபி ரன் சக்சஸ் மீட்டில் ஆர்.ஜே. பாலாஜி

ரன் பேபி ரன் சக்சஸ் மீட்டில் ஆர்.ஜே. பாலாஜி

படத்திற்கு ப்ரொமோஷன் முக்கியம்,  அதேசமயம் படத்தில் நல்ல கதையும் இருக்க வேண்டும்.  அப்போதுதான் அந்த ப்ரொமோஷன் திரைப்படத்திற்கு உதவும் இல்லை என்றால் உதவாது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்டார் திரைப்படங்களுக்குதான் ரசிகர்கள் தற்போதைய சூழலில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.  ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'ரன் பேபி ரன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கான நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார், தயாரிப்பாளர் லட்சுமன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய பாலாஜி 'ரன் பேபி ரன்' திரைப்படம் வெளியாகும் போது மிக குறைந்த அளவிலான திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இன்றைய சூழலில் திரைப்படத்திற்கான விளம்பரம் மற்றும் புரமோஷன் செய்வது மிக மிக அவசியம் எனவும் ஆர்.ஜே.பாலாஜி கூறினார். ஏனென்றால் இன்றைய சூழலில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு தான் ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  எனவே தங்களின் திரைப்படத்தை அடையாளப்படுத்த புரமோஷன் முக்கியமான தேவையாக இருக்கிறது என தெரிவித்தார்.  அதேபோல் நல்ல திரைப்படம் அதுவே தன்னை Promote செய்து கொள்ளும் என்ற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற நியூஸ் 18 தமிழ்நாடு கேள்விக்கு,  புரமோஷன் முக்கியம்,  அதேசமயம் படத்தில் நல்ல கதையும் இருக்க வேண்டும்.  அப்போதுதான் அந்த புரமோஷன் திரைப்படத்திற்கு உதவும் இல்லை என்றால் உதவாது என தெரிவித்தார்.

இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் பேசுகையில் 'ரன் பேபி ரன்' திரைப்படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை முழுமையாக படித்ததாகவும், அதில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். குறிப்பாக தவறுகளை சுட்டிக்காட்ட அனைவருக்கும் உரிமை உள்ளது. அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

First published:

Tags: RJ Balaji