Home /News /entertainment /

சூர்யா, கார்த்தி ஸ்டைலில் பொங்கல் கொண்டாடிய ரசிகர்கள்... வைரலாகும் பதிவு

சூர்யா, கார்த்தி ஸ்டைலில் பொங்கல் கொண்டாடிய ரசிகர்கள்... வைரலாகும் பதிவு

கார்த்தி, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த இரும்பு திரை மெகாஹிட் ஆனதால், சர்தார் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

    நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் பொங்கல் கொண்டாடியதைப் போன்று ரசிகர்களும் செலிபிரேட் செய்து சமூக வலைதளங்களில் படங்களை பதிவிட்டுள்ளனர். இவை வைரலாகி வருகிறது.

    கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால், பொங்கல் கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெறவில்லை.

    தமிழில் வலிமை, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள், தியேட்டர்களில் 50 சதவீதம மட்டுமே பார்வையாளர்கள் அனுமதி உள்ளிட்ட காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற சிக்கல்கள் சூர்யா, கார்த்தி படங்களுக்கு ஏற்படவில்லை.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4-ம்தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான புரொமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் சிறப்பாக செய்து வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    இதேபோன்று கார்த்தி நடிப்பில் விருமன் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று, படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

    அடுத்ததாக கார்த்தி, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த இரும்பு திரை மெகாஹிட் ஆனதால், சர்தார் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

    இந்நிலையில் அண்ணன் சூர்யாவும், தம்பி கார்த்தியும் உற்சாகத்துடன் பொங்கலை கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வைரலாகின.

    சூர்யா, கார்த்தியை பின்பற்றி ரசிகர்களும் பொங்கல் கொண்டாட்ட படங்களை வெளியிட்டுள்ளனர். இவை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதேபோன்று, ரசிகர்களும் தன்னார்வத்துடன் எதற்கும் துணிந்தவன் பட போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். இவையும் ரசிக்கும் விதமாக உள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi, Actor Suriya

    அடுத்த செய்தி