ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வலிமை ட்ரெய்லரை திரையரங்கில் பார்க்க திரண்ட ரசிகர்கள்!

வலிமை ட்ரெய்லரை திரையரங்கில் பார்க்க திரண்ட ரசிகர்கள்!

வலிமை

வலிமை

வலிமை படத்தின் ட்ரெய்லரிலிருந்து பைக் சண்டைக் காட்சிகள் படத்தில் பிரதானமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சென்டிமெண்ட் காட்சிகளும் உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வலிமை படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. இதனை அகன்ற திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர்.

அஜித்தின் வலிமை திரைப்படம் 2022 ஜனவரி 13 வெளியாகிறது. தெலுங்கில் பலம் என்ற பெயரிலும் படம் வெளியாக உள்ளது. படத்தின் இந்திப் பதிப்பையும் வெளியிட உள்ளனர். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. சோனி மியூஸிக் சவுத் தனது யூடியூப் பக்கத்தில் ட்ரெய்லரை வெளியிட்டது. காலை வரை 86 லட்சம் பார்வைகளையும், 11 லட்சம் லைக்குகளையும் ட்ரெய்லர் பெற்றுள்ளது.

வலிமை ட்ரெய்லர் நேற்று முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ட்ரெய்லரை அகன்ற திரையில் காண்பதற்காக ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர். தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் இடைவேளையில் வலிமை ட்ரெய்லர் திரையிடப்படுகிறது. அஜித் ரசிகர்கள் காரணமாக நேற்றைய அடாது மழையிலும் படங்களுக்கு நல்ல கூட்டம் இருந்தது. வலிமை ட்ரெய்லரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். ட்ரெய்லர் திரையிடப்பட்டதும் திரையரங்கிலிருந்து ரசிகர்கள் வெளியேறிய சம்பவமும் நடந்திருக்கிறது.

' isDesktop="true" id="653007" youtubeid="Gi83R8jEqZU" category="cinema">

வலிமை படத்தின் ட்ரெய்லரிலிருந்து பைக் சண்டைக் காட்சிகள் படத்தில் பிரதானமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சென்டிமெண்ட் காட்சிகளும் உள்ளன. வெளிநாடுகளில் கதை நடந்தாலும் அதன் தொடக்கப்புள்ளி மதுரை என்பதையும் வலிமை ட்ரெய்லர் உணர்த்துகிறது. படத்தில் அஜித்துக்கு காதலோ, டூயட்டோ இல்லை என்பதையும் ட்ரெய்லர் உறுதி செய்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Ajith