• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay: கேரளாவில் அதிகரிக்கும் விஜய் ரசிகர்கள்!

Vijay: கேரளாவில் அதிகரிக்கும் விஜய் ரசிகர்கள்!

விஜய்

விஜய்

தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா என மாநிலங்கள் கடந்தும், நாடு கடந்து இலங்கையிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

  • Share this:
    நடிகர் விஜய் திரைப்படங்கள் கேரளாவில் நாளுக்கு நாள் ரசிகர் கூட்டத்தை அதிகரித்து வருகிறது.

    தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை தன் வசப்படுத்தி உள்ள நடிகர் விஜய், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் லாபகரமான நடிகராக கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் 200 கோடி ரூபாய் வசூலை நிச்சயம் கடந்துவிடும் என்ற நம்பிக்கையை அன்மையில் வெளியான திரைப்படங்கள் மூலம் நிரூபித்துள்ளார்.

    தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா என மாநிலங்கள் கடந்தும், நாடு கடந்து இலங்கையிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு நிகராக தற்போது கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் சக்கை போடு போட்ட நிலையில், இரண்டாவது அலை நோய்த்தொற்று அடங்கி மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களை திரையரங்கை நோக்கி ஈர்க்க, திரையரங்க உரிமையாளர்கள் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தை மீண்டும் திரையிட்டு வருகின்றனர்.









    இந்த திரைப்படத்தை காண கேரளாவில் ரசிகர்கள் புதிய திரைப்படத்திற்கு படையெடுத்து வருவது போல அணி அணியாக படையெடுத்து வருவது ஒட்டுமொத்த கேரளாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2004-ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்திற்கு தற்போது 15 ஆண்டுகள் கழித்தும் கேரளாவில் உள்ள ரசிகர் கூட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: