முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு காத்திருக்கும் படங்கள்... நாட்டு நாட்டு பாடல் சாதிக்குமா?

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு காத்திருக்கும் படங்கள்... நாட்டு நாட்டு பாடல் சாதிக்குமா?

ராம் சரண் - ஜுனியர் என்டிஆர்

ராம் சரண் - ஜுனியர் என்டிஆர்

ஏற்கனவே ஆஸ்கர் விருதுக்கு அடுத்து உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதினை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளதால் ஆஸ்கர் விருது இந்த பாடலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • california

95-வது ஆஸ்கார் விருது விழா மார்ச் 12 அன்று அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறகிறது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் நேரடி ஒளிப்பரப்பாக உள்ளது. இவ்விழாவினை இந்திய பார்வையாளர்கள் மார்ச் 13ம் தேதி காலை 5.30 மணிக்கு நேரலையில் காணலாம். ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது நேரடி ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் சிறந்த பிறமொழி திரைப்படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளை சேர்ந்த படங்களுக்கும் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தியா சார்பில் நிறைய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் அமீர்கான் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான லகான் திரைப்படம் மட்டுமே ஆஸ்கரின் இறுதி சுற்றை எட்ட முடிந்தது. ஆனாலும் ஒரு நேரடி இந்திய திரைப்படம் ஆஸ்கர் மேடையில் இதுவரை விருது வென்றதில்லை.

இந்த நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில், மரகதமணி இசையமைப்பில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் போட்டியில் இறுதிச்சுற்று நாமினேஷனில் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே ஆஸ்கர் விருதுக்கு அடுத்து உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதினை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளதால் ஆஸ்கர் விருது இந்த பாடலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய திரைப்பட பங்களிப்பாக ஆல் தட் பிரீத்ஸ் ( All That Breathes) ஆவணப்படமும், தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் ( The Elephant Whisperers) ஆவண குறும்படமும் இந்த முறை ஆஸ்கர் போட்டியில் இறுதிச்சுற்று நாமினேஷன் வரை சென்றுள்ளது. எனவே மூன்று பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஆஸ்கர் விருது இந்த முறை இந்தியப் படம் வெல்லும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆஸ்கர் விருது அறிவிப்பிற்காக இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

First published:

Tags: Rajamouli, Ram Charan