Home /News /entertainment /

தனுஷ் பட க்ளிம்ப்ஸில் தனுஷ் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி!

தனுஷ் பட க்ளிம்ப்ஸில் தனுஷ் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி!

தி க்ரே மேன்

தி க்ரே மேன்

Dhanush: தனுஷின் இரண்டாவது ஆங்கில திரைப்படம் தி க்ரே மேன். நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆன்டணி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இணைந்து இயக்கி உள்ளனர்.

  • News18
  • Last Updated :
தனுஷ் நடித்திருக்கும் தி க்ரே மேன் ஆங்கிலத் திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இதில் தனுஷ் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

தனுஷின் இரண்டாவது ஆங்கில திரைப்படம் தி க்ரே மேன். நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆன்டணி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இணைந்து இயக்கி உள்ளனர். ரேயன் ஹோஸ்லிங், க்ரிஷ் ஈவன்ஸுடன் தனுஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்களில் இவர்கள் மூவருடைய புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வெளியானது. இதில் ரேயன் ஹோஸ்லிங், க்ரிஷ் ஈவன்ஸ் இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தனுஷ் இடம்பெறும் க்ளிம்ப்ஸை வெளியிடும்படி அவர்கள் இணையத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் அவர்கள் இதுவரை தயாரித்த திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ரெட் நோட்டீஸ் திரைப்படத்தை விடவும் அதிக பொருட்செலவில் தி க்ரே மேன் தயாராகியுள்ளது.

சுமார் 200 மில்லியன் டாலர்கள் - நமது ரூபாயில் கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் இந்தப் படத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக இதனை ரூஸோ சகோதரர்கள் எடுத்துள்ளனர். ஜூலை மாதம் நெட்பிளிக்ஸில் இந்தத் திரைப்படம் நேரடியாக வெளியாக உள்ளது.

Also read... இணையத்தில் வைரலாகும் விஜய் எடுத்த புகைப்படம்...!

சென்ற வருட ஆரம்பத்தில் கர்ணன் திரைப்படம் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியானது. அதன் பிறகு வெளியான ஜகமே தந்திரம் திரையரங்குகளுக்கு பதில் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. தனுஷ் நடித்த இந்தித் திரைப்படம் அத்ரங்கி ரேயும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அடுத்து அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் மாறன் திரைப்படமும் ஓடிடியில் தான் வெளியாகிறது.

தொடர்ச்சியாக தனுஷ் நடித்த 3 திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் தி கிரே மேன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. அந்த வகையில் தனுஷ் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்தான்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி