Home /News /entertainment /

சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா… ரசிகர்கள் கொண்டாட்டம்…

சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா… ரசிகர்கள் கொண்டாட்டம்…

சூர்யா

சூர்யா

சூர்யா தனது 25 ஆண்டு கால திரைப் பயணத்தில் சீரான இடைவெளியில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சூர்யா, சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த படத்தை பிரபல இயக்குனர் வசந்த் இயக்க, மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது.

    இந்த படத்தில் விஜய், சிம்ரன், கவுசல்யா, ரகுவரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அறிமுகமான முதல் படமே சூர்யாவுக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.

    Pavani Amir: என்றென்றும் என்னுடையவராக இருப்பீர்களா? ஒருவழியாக அமீர் காதலை ஏற்ற பாவனி!

    அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யுடன் அன்றைக்கே இணைந்து நடித்திருந்தார் சூர்யா.

    அவரது 25 ஆண்டுகால  திரைத் துறை பயணத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, Suriya, 25 years of Suriya உள்ளிட்ட ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.







    சூர்யா தனது 25 ஆண்டு கால திரைப் பயணத்தில் சீரான இடைவெளியில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

    சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம், சூரரைப் போற்று படங்கள் விருதுகளையும், பாராட்டுக்களையும் குவித்துள்ளது. பாலாவுடன் வணங்கான், சிவா இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படம் மற்றும் வெற்றி மாறனுடன் வாடிவாசல், விக்ரமின் அடுத்த பாகம் ஆகிய சூர்யாவின் அடுத்த படங்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி