நடிகர் விஜய்யின் திருமண நாளைக் கொண்டாடும் வகையில் ஏழை ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து அசத்திய ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் திருமண நாளைக் கொண்டாடும் வகையில் ஏழை ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து அசத்திய ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் திருமண நாளைக் கொண்டாடும் வகையில் ஏழை ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து அசத்திய ரசிகர்கள்
நடிகர் விஜய் - சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் அவரது ரசிகர்கள் ஏழை ஜோடிக்கு தங்களது சொந்தச் செலவில் திருமணம் செய்து வைத்து அனைத்து சீர்வரிசை பொருட்களையும் வழங்கியது காண்போரை நெகிழ வைத்தது.
புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடிகர் விஜய் - சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு அதைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையன் கவுண்டன் பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மற்றும் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சுகன்யா உள்ளிட்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும் புதுக்கோட்டை நிஜாம் காலனி உள்ள மாவட்ட விஜய் மக்கள் மன்றத் தலைவர் பர்வேஸ் வீட்டில் அவரது தலைமையில் விஜய் ரசிகர்கள் படை சூழ திருமணம் செய்து வைத்தனர்.
அப்போது அங்கிருந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். பின்பு தங்களது சொந்தச் செலவில் அந்த ஏழை ஜோடி அசந்து போகும் அளவிற்கு தங்கத்திலான தாலி, பீரோல், கட்டில், மெத்தை, கிரைண்டர், பாத்திர பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசைகள் கொடுத்து அசத்தினர். பின் மணமக்களுக்கு விருந்து வைத்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள், அவர்களை வாழ்த்தி மணமகன் வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர்.
Published by:Rizwan
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.