தளபதி 63 முக்கியமா?.. நேசமணி முக்கியமா? - தளபதி 63 தயாரிப்பாளர்

தளபதி 63 முக்கியமா?.. நேசமணி முக்கியமா? - தளபதி 63 தயாரிப்பாளர்
அர்ச்சனா கல்பாத்தி
  • News18
  • Last Updated: May 30, 2019, 12:10 PM IST
  • Share this:
‘தளபதி 63’ படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு வித்தியாசமாக பதிலளித்துள்ளார் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


டீசர், ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் தனது சமூகவலைதள பக்கத்தில் படம் குறித்த அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். அதில், இப்போது ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் கேட்க சரியான நேரமல்ல, நேசமணிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறி #Pray_For_Neasamani ஹேஸ்டேக்கை குறிப்பிட்டுள்ளார்.2000-ம் ஆண்டில் வெளிவந்த பிரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சியை மையமாக வைத்து நேற்று மாலை முதலே #Pray_For_Neasamani ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டானது குறித்து பிரபல செய்தி சேனலுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகர் வடிவேலு, “என்னைப் பற்றி உலகம் முழுவதும் மக்கள் பேசி வருவது கடவுள் கொடுத்த வரம்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: தமிழகத்தில் வாக்கு பெற பிக்பாஸ் போதும் -சீமான்

First published: May 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்