முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பட்டமளிப்பு விழாவில் 'வாரிசு' விஜய்யின் ஸ்டைலில் முத்தமிடும் மாணவர்- இசையமைப்பாளர் தமன் கொடுத்த ரியாக்‌ஷன்!

பட்டமளிப்பு விழாவில் 'வாரிசு' விஜய்யின் ஸ்டைலில் முத்தமிடும் மாணவர்- இசையமைப்பாளர் தமன் கொடுத்த ரியாக்‌ஷன்!

 நடிகர் விஜய்

நடிகர் விஜய்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதனைப் பகிர்ந்த இசையமைப்பாளர் தமன், ஹாஹாஹா செம என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்த புது ஸ்டைல் கிடைத்துவிட்டது என ரஞ்சிதமே பாடலில் முத்தமிடும் ஸ்டைலை ரசிர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர் மேடை ஏறி சான்றிதழைப் பெற்றுக்கொண்டு ரஞ்சிதமே பாடலில் விஜய் முத்தமிடும் ஸ்டைலை மேடையில் செய்தார். இதனையடுத்து மாணவரின் செயலைப் பார்த்து மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியானார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  ‘அநியாயம் பண்றீங்கடா!’ என்பது போன்று நெட்சன்கள் கமெண்ட் செய்து வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில்  இதனைப் பகிர்ந்த இசையமைப்பாளர் தமன், ஹாஹாஹா செம என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினிக்கு அடுத்து நடிகர் விஜய்யும் தனது படங்களில் பிரத்யேக ஸ்டைல் மற்றும் மேனரிசங்களை கடைபிடித்துவருகிறார். அவரது ரசிகர்களும் விஜய்யை பின்தொடர்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu