• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல நடிகைக்கு கல்லீரல் தானம் செய்ய முன் வந்த ரசிகர் - நெகிழ்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகைக்கு கல்லீரல் தானம் செய்ய முன் வந்த ரசிகர் - நெகிழ்ச்சியில் திரையுலகம்!

கே.பி.ஏ.சி லலிதா

கே.பி.ஏ.சி லலிதா

கல்லீரல் செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கே.பி.ஏ.சி லலிதா.

  • Share this:
    மூத்த நடிகை கே.பி.ஏ.சி லலிதாவுக்கு ரசிகர் ஒருவர் கல்லீரல் தானம் செய்ய முன்வந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி லலிதா. இவரது கணவர் இயக்குநர் பரதன். நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற தேவர் மகன் படத்தை இயக்கியவர். விஜய்யுடன் காதலுக்கு மரியாதை, அஜித்துடன் கிரீடம், மாதவனின் அலைபாயுதே மற்றும் உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் கல்லீரல் செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கே.பி.ஏ.சி லலிதா. இதையடுத்து உடனடியாக அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாகக் கூறி, கல்லீரல் தானம் கேட்டு அவரது மகள் ஸ்ரீகுட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதைப் பார்த்த நடிகை KPAC லலிதாவின் ரசிகரும், கேரள நாடகக் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான, கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்ய முன் வந்துள்ளார். 54 வயதான சோபிக்கும், நடிகை லலிதாவுக்கும், ஒரே குரூப் ரத்தம் என்பதும் அவர் மது, புகைப்பழக்கம் இல்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகைக்கு கல்லீரல் தானம் செய்ய முன் வந்த ரசிகரைப் பற்றி அறிந்த கேரள திரையுலகம் மகிழ்ச்சியில் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: