கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு ஆறுதல் கூறிய சிம்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு ஆறுதல் கூறிய சிம்பு!
நடிகர் சிம்பு
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரசிகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் சிம்பு ஆறுதல் கூறியுள்ளார்.

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5409 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 1547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட சிம்பு நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் சி.என். சிம்பு ஆனந்தன் என்பவருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சிதம்பரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்த நடிகர் சிம்பு மற்ற நிர்வாகிகள் மூலம் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.


அப்போது உடல்நலம், சிகிச்சை முறைகள் குறித்து விசாரித்த சிம்பு மனதைரியத்தை கைவிட வேண்டாம் என்று ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார். மேலும் விரைவில் சிகிச்சை முடிந்து நலம் பெற்று வீடு திரும்ப இறைவனிடம் தான் பிரார்த்திப்பதாகவும் ரசிகரிடம் பேசியுள்ளார் சிம்பு.










First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading