பிரபல வில்லன் நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மலையாளத்தில் பிரபல வில்லன்நடிகராக இருப்பவர் என்.டி.பிரசாத். 2016-ல் நிவின் பாலி நடிப்பில் ஆக்சன் ஹீரோ பிஜு என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் என்.டி. பிரசாத் மலையாள திரையுலகில் பிரபலம் அடைந்தார்.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து என்.டி. பிரசாத்துக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
43 வயதாகும் என்.டி. பிரசாத்துக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கொச்சி அருகேயுள்ள களமச்சேரியில் அவர் வசித்து வந்தார்.
பல்லாவரம் டூ பான் இந்தியா ஸ்டார்.. கோலிவுட், டோலிவுட்டில் கலக்கும் தமிழ் பெண் சமந்தா!
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 7.30 அளவில் என்.டி. பிரசாத், தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலில் இந்த சம்பவத்தை அவரது குழந்தைகள் தான்பார்த்துள்ளார்கள்.
அவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரசாத்தின் உடல் அவரது குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. குடும்ப பிரச்னை மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே' - சத்யராஜின் திரைப்பயணம்!
குடும்ப பிரச்னை காரணமாக பிரசாத் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் பெரும்பாலான நேரங்களில் மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்.டி. பிரசாத்தின் மறைவுக்கு மலையாள திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.