வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை.. பிரபல டிவி சீரியல் நடிகர் கைது!

சீரியல்கள் மட்டுமின்றி ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார் மது பிரகாஷ்

news18
Updated: August 8, 2019, 3:33 PM IST
வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை.. பிரபல டிவி சீரியல் நடிகர் கைது!
மாதிரிப்படம்
news18
Updated: August 8, 2019, 3:33 PM IST
மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து டிவி சீரியல் நடிகரை போலீசார் கைதுசெய்துள்ளனர். 

தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர் மது பிரகாஷ். சீரியல்கள் மட்டுமின்றி ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2015 -ம் ஆண்டு பாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாரதி தனது கணவரின் குடும்பத்தாருடன் பஞ்சவடி காலனியில் வசித்து வருகிறார்.

மதுபிரகாஷ் ஷூட்டிங் காரணமாக தினமும் இரவு வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். கணவரின் இந்த நடவடிக்கை பிடிக்காததால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு தனது உடற்பயிற்சியை முடித்துவிட்டு படப்பிடிப்பு செல்வதாக கூறிச்சென்ற மது பிரகாஷிடம், இன்று சீக்கிரம் வீட்டுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று பாரதி மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இரவு 7.30 மணிக்கு வீடு திரும்பிய மதுபிரகாஷுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கை அறையிலிருக்கும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பாரதி.

இதையடுத்து மதுபிரகாஷ் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பாரதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Loading...

இதனிடையே பாரதியின் தந்தை, மதுபிரகாஷ் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மதுபிரகாஷை போலீசார் கைது செய்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடியோ பார்க்க: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. கடுப்பான ஆசிரியர்

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...