Home /News /entertainment /

பிரபல தியேட்டரின் ஸ்க்ரீனை கிழித்த தனுஷ் ரசிகர்கள்… எல்லை மீறிய கொண்டாட்டம்

பிரபல தியேட்டரின் ஸ்க்ரீனை கிழித்த தனுஷ் ரசிகர்கள்… எல்லை மீறிய கொண்டாட்டம்

சேதமடைந்த தியேட்டர் ஸ்க்ரீன்.

சேதமடைந்த தியேட்டர் ஸ்க்ரீன்.

Thiruchitrambalam movie : சேதம் அடைந்த ஸ்க்ரீனை உடனடியாக சரி செய்வது கடினம் என்றும், இதற்கு அதிக செலவு ஆகும் எனவும் தியேட்டர் துறையினர் கூறியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்சிற்றம்பலம் படத்தின் கொண்டாட்டத்தின்போது பிரபல திரையரங்கின் ஸ்க்ரீன் கிழிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    எந்த நடிகரின் படமும் வெளிவந்தாலும், அதனை சிறப்பாக புரொமோஷன் செய்யும் திரையரங்குகளில் ரோகினி தியேட்டரும் ஒன்று. இதனால் ரோகினி தியேட்டரை ரசிகர்களின் கோட்டை என்ற அடைமொழியுடனும் ரசிகர்கள் அழைப்பதுண்டு.

    அந்த வகையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு புரொமோஷனை ரோகினி தியேட்டர் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது. இங்கு எஃப்.டி.எஃப்.எஸ். எனப்படும் முதல் நாள் முதல் காட்சி நல்ல அனுபவமாக இருக்கும் என்று சொல்லப்படுவது உண்டு.

    சூர்யாவின் பட நாயகி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்…

    லெஜெண்ட் சரவணன் நடித்த லெஜெண்ட் படத்திற்கே அதிகாலை 4 மணி காட்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், திருச்சிற்றம்பலம் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி காலை 8 மணிக்குத்தான் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 2வது காட்சி முடிந்தபோது, திரைக்கு அருகே சென்று ஆட்டம் போட்ட தனுஷ் ரசிகர்கள், திரையை சேதப்படுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பான ஃபோட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பதிவிட்டுள்ள சினிமா ஆர்வலர்கள், தியேட்டரில் படத்தை பார்த்தால் ஸ்க்ரீனை கிழிக்கிறீர்கள்… வீட்டில் ஓ.டி.டி.யில் பார்க்கும்போது டிவியை உடைப்பீர்களா எனஅட்டூழியம் செய்த ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர்.

    பெண்களை பாடி ஷேமிங் செய்பவர்களுக்கு பாடம் எடுக்க போகும் ரஜினி பட நாயகி!

    சேதம் அடைந்த ஸ்க்ரீனை உடனடியாக சரி செய்வது கடினம் என்றும், இதற்கு அதிக செலவு ஆகும் எனவும் தியேட்டர் துறையினர் கூறியுள்ளனர். இதனால் ரசிகர்களின் கொண்டாட்டம்தான் பாதிக்கும் என்பதே சினிமா ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி