பாகுபலி இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்த சந்திரமுகி 2 படக்குழுவினர் மீண்டும் தமிழ் படத்துக்கு. மீண்டும் தமிழில் இசையமைக்கிறார் எம்.எம் கீரவாணி. நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு தெலுங்கின் பிரபல இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் பி.வாசு கூட்டணியில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படம் 700 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் அந்த திரைப்படத்தின் நகைச்சுவை இன்றளவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலையில் பி.வாசு மும்முரமாக உள்ளார். அந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளனர்.
இந்த திரைப்படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அந்த திரைப்படத்திற்கு பாகுபலி திரைப்பட இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசை அமைக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரை இந்தப் படத்தில் நாயகியாக வேண்டும் என இயக்குனர் பி.வாசு மற்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றனர்.
அதற்காக ஒரு முன்னணி நாயகியிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். அவர்களைத் தவிர சூரரைப் போற்று படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளியும் அந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.