இசையமைப்பாளர் டி. இமானுக்கு மறுமணம் நடைபெற்றுள்ளது. இதையொட்டி அவருக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் டி.இமான். சின்னத்திரையில் தொடங்கிய அவரது இசைப் பயணம் தற்போது வெள்ளித் திரையில் பிரகாசித்து வருகிறது.
இமான் இசையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட பாடல்கள் மெகா ஹிட் ஆகின. தொடர்ந்து அவர் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...
சொந்த வாழ்க்கையை பொருத்தவரையில் இமான் தனது முதல் மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு மறுமணம் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணமகளின் பெயர் எமிலி என்றும், இவர் பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க - தளபதி 66 அப்டேட் : விஜய்யின் அம்மா கேரக்டரில் நடிப்பவர் இவர்தானா?
இந்த மறுமணத்தின்போது மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது டி. இமானின் திருமண புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது. திரைத்துறையினர் இமானுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இமான் அடுத்ததாக ஆர்யா நடிக்கும் கேப்டன், மழை, காரி, பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம், பப்ளிக் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: D.imman