முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழுக்கு வரும் கேஜிஎஃப் ஹீரோ யாஷ்.. கதை சொன்ன முன்னணி இயக்குநர்!?

தமிழுக்கு வரும் கேஜிஎஃப் ஹீரோ யாஷ்.. கதை சொன்ன முன்னணி இயக்குநர்!?

யாஷ்

யாஷ்

கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ், இந்திய அளவில் கவனம் ஈர்த்த நபராக மாறினார். கடைசியாக அவரது படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. யாஷின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கன்னட நடிகர் யாஷ் நடிக்கும் படத்தை பிரபல தமிழ் இயக்குநர் ஒருவர் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாந்த் நீல் இயக்கிய 'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஎஃப் 2' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ், இந்திய அளவில் கவனம் ஈர்த்த நபராக மாறினார். கடைசியாக அவரது படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. யாஷின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

'யாஷ் 19' படத்திற்காக பல பெரிய இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது ஆனால் இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை. KVN புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பதாகவும், இதன் பட்ஜெட் நானூறு கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது பிரபல தமிழ் இயக்குனர் பி.எஸ்.மித்ரன், யாஷிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாக சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் சரியாக நடந்தால் இருவரும் விரைவில் இணையலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இறுதியாக கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படத்தை இயக்கிய மித்ரன், ஆஷாமீரா அய்யப்பனை கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார். யாஷ் நடிக்கும் படத்தை அவர் இயக்குவது உறுதியானால், அது மித்ரனுக்கு சிறந்த திருமண பரிசாக மாறும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema