முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கொலையா? தற்கொலையா? வீட்டு குளியல் தொட்டியில் பிணமாக கிடந்த பிரபல பாடகர்!

கொலையா? தற்கொலையா? வீட்டு குளியல் தொட்டியில் பிணமாக கிடந்த பிரபல பாடகர்!

ஆரோன் கார்ட்டர்

ஆரோன் கார்ட்டர்

போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக ஆரோன் கார்ட்டர் கடந்த 2017-ல் பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

வீட்டின் குளியல் தொட்டியில் பிரபல பாடகர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஆரோன் கார்ட்டர். பிரபல பாடகராக இருக்கும் இவர், ஆரோன்ஸ் பார்ட்டி என்ற ஆல்பத்தின் மூலமாக இசை ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று கலிபோர்னியாவின் லான்கேஸ்டரில் உள்ள அவரது வீட்டில் ஆரோன் உயிரிழந்துள்ளார். அங்குள்ள குளியல் தொட்டியில் இருந்து ஆரோனின் சடலத்தை அவரது சகோதரர் நிக் கார்ட்டர் அளித்த தகவலின்பேரில் கைப்பற்றி உள்ளனர்.

யசோதா முதல் மிரள் வரை… நவம்பர் 11ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்!

ஆரோன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் அவரை கொலை செய்து விட்டனரா என்ற கோணத்தில்  போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

உயிரிழந்துள்ள ஆரோன் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். கடந்த 2011-ல் மன நல பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதன்பின்னர் தான் வரிகள் காரணமாக மிகப்பெரும் கடன் சுமையில் சிக்கியிருப்பதாக 2013-ல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக ஆரோன் கார்ட்டர் கடந்த 2017-ல் பொது வெளியில் கைது செய்யப்பட்டார். தான் போதை பொருட்களை பயன்படுத்தியது உண்மைதான் என்றும் தூக்கம் பிரச்னை காரணமாக இப்படி செய்ததாகவும் ஆரோன் கூறியிருந்தார்.

‘இரண்டே நிமிடத்தில் படத்திற்கு ஓகே சொன்னார் சுபாஸ்கரன்…’ – பொன்னியின் செல்வன் உருவானதை பகிர்ந்த மணிரத்னம்

அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்னைகள் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் உள்பட குடும்பத்தில் சகோதர சகோதரிகள் என 5 பேர் உள்ளன. இவர்களுக்கிடையே சொத்துக்களை பங்கு பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

top videos

    இந்த சூழலில் ஆரோன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Singer