கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இடம்பெற்றுள்ளார்.
கமல், லைகா புரொடக்சன், இயக்குனர் ஷங்கர், அனிருத் கூட்டணியில் இந்தியன் 2 படத்திற்கான பணிகள் கடந்த 2019-ல் தொடங்கின. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள்.
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்றவை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மூதாட்டியிடம் ஆசிர்வாதம்.. ஊழியரிடம் நலம் விசாரிப்பு.. ஏர்போர்ட்டில் பரபர அஜித்! வைரல் வீடியோ!
இடைப்பட்ட சூழலில் கமல் விக்ரம் படத்தை நடித்து முடித்து சூப்பர் ஹிட்டாக்கினார். ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில் மீண்டும் இந்தியன் 2 படக்குழு கடந்த செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறது.
தற்போதைய சூழலில் இந்தியன் 2 படத்தை அடுத்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ளார்.
காதல் மனைவி நயன்தாராவுக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த விக்னேஷ் சிவன்!
இதற்கான அறிவிப்பை யோக் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மேக் அப் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
யோக்ராஜ் சிங் 50க்கும் அதிகமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரராக வாழ்க்கையை தொடங்கிய யோக்ராஜ் சிங், இந்திய அணிக்காக 6 ஒரு நாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு இவர் பெயர் போனவர். அணியில் இருந்து தனது மகன் யுவராஜ் சிங் நீக்கப்பட்டதற்கு தோனியே காரணம் என்று குற்றச்சாட்டை கிளப்பி யோக்ராஜ் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood