தளபதி 65 : மிக விரைவில் விஜய்யுடன்... சூசகமாக சொன்ன நடிகை!

தளபதி 65 : மிக விரைவில் விஜய்யுடன்... சூசகமாக சொன்ன நடிகை!
விஜய்
  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்தப் படத்தை அடுத்து நடிகர் விஜய்க்கு கதை சொன்ன இயக்குநர்களின் பெயர் பட்டியல் நீண்டாலும், அவர் மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணையும் இந்தப் படம் துப்பாக்கி இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்களுடன் காஜல் அகர்வால் உரையாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தன்னுடன் நடித்த நடிகர்களில் விஜய் மிகவும் பிடித்த நடிகர் என்று கூறியிருக்கும் காஜல், விரைவில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.


காஜல் அகர்வாலின் இந்த சூசகமான பதிலின் மூலம், அவர்தான் துப்பாக்கி 2 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.


முன்னதாக துப்பாக்கி, மெர்சல், ஜில்லா உள்ளிட்ட படங்களில் விஜய் - காஜல் அகர்வால் ஜோடி இணைந்து நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த யோகி பாபு
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்