முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காரைக்காலில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகிபாபு

காரைக்காலில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகிபாபு

நடிகர் யோகி பாபு

நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காரைக்காலில் உள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரபல நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்துள்ளார். 

மகா சிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு தொடங்கும் சிறப்பு யாக கால பூஜைகள் விடிய விடிய அதிகாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 9 திரவியங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் காரைக்காலுக்கு வருகை புரிந்து இருந்த பிரபல நடிகர் யோகி பாபு காரைக்காலில் உள்ள ஸ்ரீ தர்பானேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. காரைக்காலில் தர்பானேஸ்வரர் ஆலயத்தில் யோகி பாபு சாமி தரிசனம் செய்கிறார் என்ற செய்தி வெளியானவுடன் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு முன் திரண்டனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகிறார். கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து அவருடைய மார்க்கெட்டை உயர்த்தியது. யோகி பாபு ஒரே நேரத்தில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

அண்மையில் இவரது நடிப்பில், அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் வெளியான பொம்மை நாயகி படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Yogibabu