ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் சொகுசு கப்பலில் இருந்த பிரபல நடிகர் அசந்து தூங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
ஹாலிவுட் முன்னணி நடிகையான 53 வயதாகும் ஜெனிபர் லோபஸ் நடிகர், நடன கலைஞர் மற்றும் பாடகர் என 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
முன்னதாக, ஜெனிபர் லோபஸ் அவரை விட 4 வயது குறைந்த, நடிகர் பென் அப்லெக் என்பவரை முதன்முறையாக 18 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, நிச்சயம் செய்தார். ஆனால் இந்த நிச்சயதார்த்தம் திருமணத்தில் முடியவில்ல.
விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் முதல் பாடல்… மேக்கிங் வீடியோ ரிலீஸ்
இந்நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் பென் அப்லெக்கிற்கு 3 குழந்தைகள் உள்ளனர். இது தனிக்தை.
தற்போது திருமணம் முடித்துள்ள பென் மற்றும் ஜெனிபர் லோபஸ் ஆகியோர், தேனிலவை பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் செய்னி ஆற்றில் சுற்றுலா கப்பல் ஒன்றில் கொண்டாட சென்றுள்ளனர்.
சென்ற இடத்தில் நடிகர் பென் கப்பலிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி, போன்று அசந்து தூங்குகிறார். இதுபற்றிய பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. தூங்குவதற்கா சொகுசு கப்பலுக்கு பென் வந்தார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தால் தேனிலவுக்கு வந்த இடத்திலும் இப்படி அசந்து தூங்குவார் என்றும், தூங்குவதற்கான இடம் இதுவல்ல என்று நெட்டிசன்கள் புகைப்படத்திற்கு கமென்ட் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.