உடல் நல பாதிப்பு காரணமாக நடிகர் போண்டா மணி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
58 வயதாகும் போண்டா மணி, தமிழ் சினிமாவில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பல கலக்கலான நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியவர் போண்டா மணி.
இலங்கையை சேர்ந்த போண்டா மணியின் இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இவருடன் 16 பேர் பிறந்த நிலையில் அவர்களில் 8 பேர் இலங்கையில் கலவரத்தின்போது உயிரிழந்தனர்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக போண்டா மணி பாண்டிபஜாரில் வாட்ச் மேன் பணியில் சிறிது காலம் இருந்துள்ளார். வடிவேலு உடன் இவர் நடித்த சுந்தரா டிராவல்ஸ், வின்னர், மருதமலை படங்கள் போண்டா மணிக்கு புகழை தேடித் தந்தன.
இதையும் படிங்க - தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நகைச்சுவை அரசி ’மனோரமா’ பிறந்த நாள்!
இந்நிலையில் இதய கோளாறு காரணமாக போண்டா மணிக்கு இன்று உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க - மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?
சினிமாவிற்கு வாய்ப்பு தேடும்போது போண்டா, தண்ணீரை குடித்தே பசியாற்றிக் கொள்வாராம். இதனை அறிந்த இயக்குனர் வி. சேகர், கேதீஸ்வரன் என்ற பெயரை போண்டா மணி என்று மாற்றியமைத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.