Maniratnam: மணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு - எச்சரித்த சுஹாசினி

மணிரத்னம் - சுஹாசினி

நல்லவேளை இந்த விஷயம் சுஹாசினியின் காதுகளுக்கு செல்ல, அவர் ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

  • Share this:
    திரையலக பிரபலங்கள் பெயரில் மோசடி செய்வது தொடர்கதை. பிரபலமாகக் கூட சிலவேளை இருக்க வேண்டியதில்லை. சில தினங்கள் முன்பு, சினிமாவில் ஐயராக தலைகாட்டும் ஒருவர் இறந்துவிட்டதாக கூறி சிலர் பணம் வசூலித்திருக்கிறார்கள். முகம் தெரியாதவர்களுக்கே இந்த நிலை. மற்றவர்கள் குறித்து சொல்ல வேண்டியதில்லை.

    படம் தயாரிக்கிறோம், நாயகி தேவை என்று யாராவது நடிகர் படத்தைப் போட்டு விளம்பரம் செய்வது, நட்சத்திரங்கள் பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குத் தொடங்கி அவர்கள் பெயரில் செய்தி வெளியிடுவது என போலிகள் பலவிதம். நேற்று மணிரத்னத்தின் பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு நான் ட்விட்டரில் இணைந்திருக்கிறேன் என மணிரத்னம் பெயரில் ஒரு கணக்கு தொடங்கப்பட, மணிரத்னம் ரசிகர்கள் அந்த கணக்கை ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். பொதுவெளியில் தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவர் ட்விட்டருக்கு வந்தால் ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நல்லவேளை இந்த விஷயம் சுஹாசினியின் காதுகளுக்கு செல்ல, அவர் ரசிகர்களை எச்சரித்துள்ளார். வேறொன்றுமில்லை, அந்த ட்விட்டர் கணக்கை தொடங்கியது மணிரத்னம் அல்ல. ஏதோ ஒரு போலி.

    "யாரோ ஒருவர் டைரக்டர் மணிரத்னம் என்ற பெயரில் ட்விட்டரில் இன்று இணைந்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். அது போலி கணக்கு. அந்த நபர் போலியானவர். தயவுசெய்து கவனமாக இருங்கள், மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள், நன்றி" என கூறியுள்ளார்.

    சமூகவலைதளம் வந்த பிறகு உண்மையைவிட போலிகள் அதிகரித்துவிட்டனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: