ட்விட்டரில் கணக்கு தொடங்கி விட்டேனா? - வடிவேலு விளக்கம்

ட்விட்டரில் கணக்கு தொடங்கி விட்டேனா? - வடிவேலு விளக்கம்
நடிகர் வடிவேலு
  • Share this:
ட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கியிருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் வடிவேலு விளக்கமளித்துள்ளார்.

பெரும்பாலான நடிகர், நடிகைகள் சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கணக்கு ஆரம்பித்து ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். அதன்மூலம் தங்களது பட அறிவிப்புகள் தொடங்கி, புகைப்படங்கள், நாட்டில் நடக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் வடிவேலு தற்போது மீண்டும் ட்விட்டரில் புதிய கணக்கு ஆரம்பித்திருப்பதாக அவரது பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டிருந்தது.


அதில், “பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு. #PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன்” என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது.இதுதொடர்பாக அவரிடம் நாம் விசாரித்த போது, அக்கணக்கு 2013-ம் ஆண்டு இயக்குநர் யுவராஜ் ஆரம்பித்து வைத்த ட்விட்டர் கணக்கு அது. நான் இப்போது அந்தக் கணக்கை பயன்படுத்துவதில்லை. எனது பெயரை வைத்து யாரோ புதிதாக கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள். நான் தற்போது ட்விட்டரில் இல்லை” என்று கூறினார்.

மேலும் படிக்க: விஜயகாந்தை சந்தித்த நடிகர் யோகி பாபு!
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading