Home /News /entertainment /

நடிகர் சூர்யா பெயரில் போலி அறிக்கை... நடவடிக்கை எடுக்கக்கோரி 2டி நிறுவனம் புகார்

நடிகர் சூர்யா பெயரில் போலி அறிக்கை... நடவடிக்கை எடுக்கக்கோரி 2டி நிறுவனம் புகார்

சூர்யா

சூர்யா

சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் தனது டிவிட்டரில் சூர்யா பெயரில் போலியான அறிக்கை உலாவி வருவதாகவும், அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நடிகர் சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் சார்பாக ஏராளமான கல்வி உதவிகளை செய்து வருகிறார். மேலும், கல்வி தொடர்பான பொது விவகாரங்களில், தனது கருத்தை தைரியமாக எடுத்துக் கூறி, ஊடகங்களில் பலமுறை சூர்யா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    சமீபத்தில், புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அவர் வெளியிட்ட அறிக்கைகள் பரபரப்பை உண்டாக்கின. சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படமும், அதனால் எழுந்த சர்ச்சைகளும், அதற்கு சூர்யா அளித்த பதில்களும் விவாதப்பொருளாக மாறின.

    இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை பாராட்டி அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டன. இதுதொடர்பாக நடிகர் சூர்யா பெயரிலும் அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    அந்த அறிக்கையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்த தீர்ப்பு கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை நனவாக்கும் என்றும் இதற்காக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறி நடிகர் சூர்யாவின் கையெழுத்தும் இருந்தது.

    இதையும் படிங்க : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜான்வி கபூர், குஷி கபூர் சகோதரிகள்

    இந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் தனது டிவிட்டரில் சூர்யா பெயரில் போலியான அறிக்கை உலாவி வருவதாகவும், அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறும் தெரிவித்திருந்தார்.



     

    இந்த நிலையில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் துணை தலைவர் மனோஜ் தாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க : நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை - சாய்னா ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம்
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி