போலி ஐபோனை அனுப்பிய ஃபிளிப் கார்ட்... பணத்தை திருப்பி வாங்கிய நகுல்

ஆன்லைனில் ஆர்டர் செய்து போலி ஐபோன் கிடைத்ததாக கூறிய நடிகர் நகுலுக்கு ஃபிளிப் கார்ட் நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கியுள்ளது.

Web Desk | news18
Updated: December 7, 2018, 8:32 PM IST
போலி ஐபோனை அனுப்பிய ஃபிளிப் கார்ட்... பணத்தை திருப்பி வாங்கிய நகுல்
நடிகர் நகுல்
Web Desk | news18
Updated: December 7, 2018, 8:32 PM IST
ஆன்லைனில் ஆர்டர் செய்து போலி ஐபோன் கிடைத்ததாக கூறிய நடிகர் நகுலுக்கு ஃபிளிப் கார்ட் நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கியுள்ளது.

கடந்த 2003-ல் வெளியான ‘பாய்ஸ்’ படத்தில் நடிகர் நகுல் அறிமுகமானார். பின்னர் ‘காதலில் விழுந்தேன்’,  ‘மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களில் நகுல் கதாநாயகனாக நடித்தார். 2016-ல் ஸ்ருதி என்பவரை நகுல் திருமணம் செய்தார்.

தற்போது, ‘எரியும் கண்ணாடி’ என்னும் படத்தில் நகுல் நடித்து வருகிறார். இந்நிலையில், திருமணமாகி 3-வது ஆண்டு விழா நெருங்குவதையொட்டி நகுல், தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பி ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்தார். ஆர்டர் வந்த போது வெளியூர் சென்றிருந்த நகுல் திரும்பி வந்து பார்சலை பிரித்துப் பார்த்த போது போலி ஐபோன் வந்திருந்ததைத் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் பிரச்னையத் தீர்க்காமல் ஃபிளிப் கார்ட் நிறுவனத்தினர் அலைக்கழித்துள்ளனர். இதுதொடர்பாக நடிகர் நகுல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சமூகவலைதள பக்கத்தில் ஃபிளிப் கார்ட் நிறுவனத்தை டேக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு தற்போது ஃபிளிப் கார்ட் நிறுவனத்தினர் பணத்தை திரும்ப கொடுத்துள்ளனர். இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருக்கும் நகுல், ஃபிளிப் கார்ட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.முன்னதாக தான் பகிர்ந்த ட்வீட்டில் தன்னை போல் பலரும் ஏமாந்ததாக கூறும்போது மனதிற்கு வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ள அவர், இந்திய நிறுவனமான ஃபிளிப்கார்ட் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல், வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவையை வழங்கி இந்தியாவில் நம்பர் ஒன் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமாக வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எங்க அப்பா, அம்மாவ கண்டுபிடிச்சு தாங்க: பவர் ஸ்டார் மகள் வைஷ்ணவி போலீசில் புகார் - வீடியோ

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...