இயக்குநர் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் - நடிகையை ‘தவறிழைக்க’ அழைப்பு

இயக்குநர் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் - நடிகையை ‘தவறிழைக்க’ அழைப்பு

இயக்குநர் அஷ்வின் சரவணன்

திரைப்பட வாய்ப்புக்காக நடிகையை ‘தவறிழைக்க’ அழைத்ததாகவும் தெரிய வருகிறது.

 • Share this:
  தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் செயல்பட்டு வருவதாகவும், அதன் மூலம் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி வருவதாகவும் ‘மாயா’ பட இயக்குநர் அஷ்வின் சரவணன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை வருடங்களாக நீங்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எனது இதயப்பூர்வ நன்றி. எனது திரைப்படங்களான மாயா மற்றும் கேம் ஓவரை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு மதிப்புமிக்கது.

  Fake Instagram page in the name of a famous director Ashwin Saravanan

  எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை (AshwinMaaya) ஒருவர் தொடங்கி, மாயா திரைப்படத்தின் இயக்குநர் தாம் தான் என்றும், அதர்வா நடிக்கும் படமொன்றை தற்போது இயக்கி வருவதாகவும், கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருவதாகவும் பல்வேறு நடிகைகளுக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக எனது திரையுலக நண்பர்கள் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டுகள் மூலம் அறிந்தேன்.

  Fake Instagram page in the name of a famous director Ashwin Saravanan

  நடிகை ஒருவர் அவருக்கு பதில் அனுப்பிய போது, ‘அஷ்வின் மாயா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்கி வரும் அந்த நபர் தனது கைபேசி எண்ணை (9952116844) கொடுத்ததாகவும், திரைப்பட வாய்ப்புக்காக ‘தவறிழைக்க’ அழைத்ததாகவும் தெரிய வருகிறது.

  எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது எந்தவிதமான நடிகர்/நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்விலும் நான் ஈடுபட்டிருக்கவில்லை. எனவே, இத்தகைய நபர்களிடம் உரையாடலை தொடங்கும் முன் அவர்கள் பின்னணி குறித்து தீர ஆராயுமாறு அனைத்து நடிகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

  Fake Instagram page in the name of a famous director Ashwin Saravanan

  என்னுடைய திரைப்படங்களுக்காக எதிர்காலத்தில் நடிகர்/நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேடுதலில் நான் ஈடுபட்டால், அவர்களை முறையாக என்னுடைய குழுவோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்களோ அணுகுவார்கள்.

  மேற்கண்ட நபர் குறித்து காவல் துறையில் புகாரளிப்பதற்காக எனது வழக்கறிஞர் குழுவிடம் நான் தொடர்பு கொண்டுள்ளேன். எனது எதிர்கால முயற்சிகளுக்கும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்.” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: