Home /News /entertainment /

‘டாப் கியர்’ என்ற தலைப்பால் நடிகர் பகத் பாசில் படத்திற்கு சிக்கல்

‘டாப் கியர்’ என்ற தலைப்பால் நடிகர் பகத் பாசில் படத்திற்கு சிக்கல்

டாப் கியர் படத்தின் போஸ்டர்

டாப் கியர் படத்தின் போஸ்டர்

டாப் டியர் படத்தின் டைட்டில் பிரச்சனை சுமுகமாக பேசி தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஸ்ரீதர் ரெட்டி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
டாப் கியர் என்ற தலைப்பால் நடிகர் பகத் பாசிலின் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மலையாள திரையுலகைச் சேர்ந்த பகத் பாசில் தனது அற்புதமான நடிப்பால், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக வளர்ந்துள்ளார்.

விக்ரம் படத்தில் அமர் என்ற கேரக்டரில் பகத் பாசில் நடித்திருந்தார். இதேபோன்று, புஷ்பா படத்தில் பன்வர் சிங் செகாவத் என்ற கேரக்டரில் பகத் பாசில் நடித்திருப்பார். இவ்விரு படங்களும் அவருக்கு மிகப் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன. விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திலும் பகத் பாசில் இடம்பெறுகிறார்.

இந்நிலையில் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.  இந்த படத்திற்கு டாப் கியர் என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர்.

Soundarya Rajinikanth: செளந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பகால படங்கள்!

இதே தலைப்பில் தங்களது படம் உருவாகி வரும் நிலையில், பகத் பாசில் படத்திற்கும் அதே தலைப்பு வைக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக, தெலுங்கு பட தயாரிப்பாளர் கே வி ஸ்ரீதர் ரெட்டி கூறியுள்ளார்.

தங்களது படத்தின் ஷூட்டிங் முற்றிலும் நிறைவு பெற்று, இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், பகத் பாசில் படத்தலைப்பு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

ஃபகத் பாசில் படத் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தின் டைட்டிலை மாற்றுவார்கள் என நம்புவதாக ஸ்ரீதர் ரெட்டி கூறியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் ஆதி சாய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

Varisu | பல கோடி ரூபாய் அளவிற்கு நடைபெறும் வாரிசு படத்தின் வியாபாரம்!

டாப் டியர் படத்தின் டைட்டில் பிரச்சனை சுமுகமாக பேசி தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஸ்ரீதர் ரெட்டி.
Published by:Musthak
First published:

Tags: Mollywood, Tollywood

அடுத்த செய்தி