முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் நடிக்கும் பகத் பாசில்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் நடிக்கும் பகத் பாசில்!

உதயநிதி, பகத் பாசில்

உதயநிதி, பகத் பாசில்

மாரி செல்வராஜ் உதயநிதி இணையும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

  • Last Updated :

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம் உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் பகத் பாசிலும் முக்கிய வேடமேற்கிறார்.

கர்ணன் படத்தைத் தொடர்ந்து இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார் மாரி செல்வராஜ். துருவ் விக்ரம் நாயகன். இந்நிலையில், உதயநிதி தனக்காக ஒரு படம் செய்துத்தரும்படி மாரி செல்வராஜை கேட்டுள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவுக்கு முழுக்குப் போட தீர்மானித்துள்ளார் உதயநிதி.

தனது கடைசிப் படம் நினைவில் தங்கும் நல்ல படமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று மாரி செல்வராஜை தேர்வு செய்திருக்கிறார். மாரி செல்வராஜும் இரஞ்சித்தின் அனுமதியுடன் துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைத்து உதயநிதி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

Also read... ஜகமே தந்திரத்தைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்!

இவர்கள் இணையும் படத்தில் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பகத் பாசில் தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் அறிமுகமானார். அடுத்து தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ். தற்போது லோகேஷ் கனகராஜின் விக்ரம். தமிழில் அவரது நான்காவது படமாக மாரி செல்வராஜ் படம் இருக்கும். உதயநிதி தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்

மாரி செல்வராஜ் உதயநிதி இணையும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

First published:

Tags: Mari selvaraj, Udhayanidhi Stalin