Home /News /entertainment /

Fahadh Faasil: கேரளாவில் விலைபோகாத பகத் பாசில் படம்

Fahadh Faasil: கேரளாவில் விலைபோகாத பகத் பாசில் படம்

பகத் பாசில்

பகத் பாசில்

அல்லு அர்ஜுன் நடிக்கும் படங்கள் தெலுங்கில் வெளியானதும் உடனடியாக மலையாளத்தில் டப் செய்யப்பட்டு கேரளாவில் வெளியாகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பகத் பாசில் படம் என்றால், ஆரம்பித்த உடனே அதன் திரையரங்கு உரிமை விற்கப்படும். அத்தனை டிமாண்ட். ஆனால், அவரது புதிய படத்தின் கேரள திரையரங்கு உரிமையை வாங்க ஆளில்லாமல் இருக்கிறது.

    பகத் பாசில் முதல்முறையாக புஷ்பா என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிவரும் படம் இது. ஆக்ஷனில் அதகளப்படுத்தியுள்ளனர். இதன் புஷ்பா கதாபாத்திர அறிமுக டீஸர் பல கோடிகள் பார்வையாளர்களுடன் சாதனைப் படைத்தது. இதில் பகத் பாசில் வில்லனாக வருகிறார். இந்தப் படத்தின் டாக்கி போர்ஷன் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதன் கேரள திரையரங்கு உரிமையாக 7 கோடிகள் கேட்கிறார் தயாரிப்பாளர். ஆனால், யாரும் வாங்க முன்வரவில்லை. சரி, ஆறு கோடி கிடைத்தால் கொடுக்கலாம் என்றால், அதற்கும் யாரும் தயாரில்லை. இத்தனைக்கும் அல்லு அர்ஜுன் மலையாளிகளுக்கு இன்னொரு விஜய்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அல்லு அர்ஜுன் நடிக்கும் படங்கள் தெலுங்கில் வெளியானதும் உடனடியாக மலையாளத்தில் டப் செய்யப்பட்டு கேரளாவில் வெளியாகும். வேறு எந்த தெலுங்கு நடிகரின் படத்துக்கும் இப்படியொரு டிமாண்ட் இல்லை. புஷ்பாவில் அல்லு அர்ஜுனுடன் பகத் பாசிலும் இருக்கிறார். எனினும் படத்தை வாங்க ஆளில்லை. காரணம் கொரோனா பயம்.

    கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று இருபதாயிரத்தை கடந்துள்ளது. திரையரங்குகள் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை. அப்படியே திறந்தாலும் பார்வையாளர்கள் வருவார்களா என்பது சந்தேகம். இதனால் புஷ்பா படத்தை பெரும் தொகைக்கு வாங்க தயங்குகிறார்கள். சாதாரண நாள்களில் புஷ்பாவை எழு கோடிக்கு ஏலத்திலேயே எடுத்திருப்பார்கள். இப்போது கூவி கேட்டும் வாங்க ஆளில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Allu arjun

    அடுத்த செய்தி