Fahadh Faasil: திரையரங்கிற்கு ‘நோ’ சொன்ன ஃபகத் பாசில் படம் - சோகத்தில் ரசிகர்கள்

ஃபகத் பாசில்

மாலிக் மே 13-ம் தேதி மோகன்லாலின் மராக்கர் - அரபிக்கடலின்டெ சிம்ஹம் படத்துடன் வெளியாவதாக இருந்தது.

  • Share this:
    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பகத் பாஸிலின் மாலிக் திரைப்படம் திரையரங்குக்கு பதில் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    கொரோனா லாக்டவுனில் பகத் பாஸில் நடிப்பில் இரு படங்கள் வெளிவந்தன. ’ஸீ யூ சூன்’ மற்றும் ’ஜோஜி’. இந்த இரு படங்களும் சின்ன பட்ஜெட்டில் ஓடிடி-க்கென்றே எடுக்கப்பட்டவை. ஆனால், மாலிக் அப்படியல்ல. பிரமாண்டமாக, திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்து எடுத்த படம். பகத் பாசில் நடித்த ’டேக் ஆஃப்’, ’ஸீ யூ சூன்’ ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். பகத்துடன் நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான அரசியல் கதை களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரித்தவர் ஆன்டோ ஜோசப்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாலிக் மே 13-ம் தேதி மோகன்லாலின் மராக்கர் - அரபிக்கடலின்டெ சிம்ஹம் படத்துடன் வெளியாவதாக இருந்தது. அந்த நேரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் பட வெளியீடு தள்ளிப் போனது. எப்போது திரையரங்குகள் திறக்கும் என்பது தெரியாத நிலையில், மாலிக் படத்தை ஓடிடியில் வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லை என ஆன்டோ ஜோசப் தெரிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனேகமாக அமேசான் பிரைமில் மாலிக் வெளியாகலாம்.

    ஆன்டோ ஜோசப், பிருத்விராஜ் நடிப்பில் ’கோல்ட் கேஸ்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார். மாலிக்கைப் போலவே இந்தப் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதில் அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    திரையில் வெளியாகும் என எதிர்பார்த்த மலையாளத்தின் இருபெரும் நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாவது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: